இப்ப மட்டும் எப்படி கோவம் வரும்!!!

எல்லாரும் கோவப்படுறாங்க…

வெட்டனும், ஊசிய குத்தினும்ங்கிறாங்க,

கல்லால அடிச்சே கொல்லனும்ங்கிறாங்க….

எனக்கு மட்டும் ஏனோ

கோவமே வரல…

அட,

கேவலப்படனும்னு கூட தோனல…..

ஐயா!! ஆண் குழந்தை

ஐயோ!! பெண் குழந்தைன்னு

சொல்லும் அப்பா அம்மாவ குத்தம் சொல்ல

அப்ப

மனசு வந்தாலும் வாய் வரல….

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

ஆரம்ப பள்ளி நாள்களில்

இரு பாலர் பள்ளியில், டீச்சர்,

பசங்க எல்லாம் இடது வரிசை

பொண்ணுங்க எல்லாம் வலது வரிசைன்னு

சொல்லும் போது,

உயர அடிப்படையில் சேர்ந்து உட்கார்ந்தா

நல்லா இருக்குமேன்னு சொல்ல

அப்ப

தோனல…

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

ஊருக்கு போன நாட்களில்

பூப்புனித நீராட்டு விழாவிற்கு

அனைவரும் வருகன்னு

இருந்த போஸ்டரை கிழிச்சு

சாஸ்திர சம்பிரதாயத்த தட்டிகேட்க

அப்ப

தைரியம் இல்ல,

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

மேல் நிலை பள்ளி நாட்களில்…

ஊர்ல வர்ற போற

பொண்ணுக்கெல்லாம் நண்பர்களோடு

சேர்ந்து அப்ப

மார்க்’ போட்டேனே

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

கல்லூரி நாட்களில்…

சக தோழனும் தோழியும் கைக்கோர்த்து நடந்ததை

கலாச்சார சீர்கேடுன்னும்

மச்சி அவ அப்படின்னும் நகையாடிய எனக்கு

அப்ப தோழமையின் அருமை தெரியாதாம்

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

சும்மா இருந்த நாட்களில்….

எல்லாம் அறிஞ்ச வயசுலயும்

அம்மா கிட்ட பால் பேக்கட்டும்

அப்பா கிட்ட நியூஸ் பேப்பரும் குடுத்தேனே!

அப்ப

மனித இயல்புக்கு’ பின்னாடி ஒளிஞ்சுகிற எனக்கு

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

வேலை தேடிய நாட்களில்….

வலியை இதயத்திலும்

பஸ் பாசை கையிலும்

சுமந்து செல்லும் பெண்கள் மீது

இடித்து தன் ‘ஆண்மையை’ காட்டும் மிருகத்தை

அப்ப

இழுத்து போட்டு ரப்பு… ரப்புன்னு வைக்க துப்பில்ல

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

வேலை பார்த்த நாட்களில்…

கூட வேலை பார்க்கும் சக பெண் ஊழியருக்கு

நடக்கும் அநியாயத்தை

தட்டிக் கேட்டா??

அப்ப நமக்கு appraisal போய்டும்மன்னு பயம்

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

நண்பனுக்கு வரம் தேடிய நாட்களில்…

அடக்க ஒடுக்கமா

ஊர் வம்புக்கு போகாம…

வீட்டிலே இருக்கும் படித்த பெண் வேண்டும் என்ற எண்ணத்தோடு

கூடவே

ரெண்டு சி(c) – அதாங்க ஒரு கோடியும் ஒரு காரும்

கெடச்சா கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு

நண்பன் சொன்ன போது…

அப்ப

அது ஒட்டுண்ணி வாழ்க்கைன்னு சொல்ல தோழமை இடம் கொடுக்கல்ல

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

டிவி பார்த்த வேலையில்…

லாப்டாப் விளம்பரத்துக்கு

லாப்டாப் மாடல் காட்டாம

எதுக்குடா ஒரு பொண்ண விளம்பர பொருளா

காட்ரீங்கன்னு அப்ப கேட்காம

அப்ப மட்டும்

ஈ ஈ ன்ன பல்லகாட்டி டிவி பார்த்த எனக்கு

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

பேப்பர் படித்த நாட்களில்…

காஷ்மீர்லயும் வடகிழக்கு மாநிலத்திலயும் இராணுவத்தினர் அத்துமீறல்’

தலித், பழங்குடியினர் மீது காவல்துறை வன்கொடுமை’

ஈழம் போரில் பெண்கள் மீது தாக்குதல்’

இப்படி எத்தனை செய்திகள் வந்தாலும்

அப்ப,

இந்தியன் என்ற பற்றில் சகித்து

கொண்ட எனக்கு

மனிதனாக,

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

இப்படி எத்தனையோ சகித்துக் கொண்டும்,

ஏன் என்று கேள்வி கேட்காமல் விட்ட

இன்று

பாலியல் வன்கொடுமை செய்யும்

பொட்டைபசங்களை என்ன செய்யலாம்ன்னு

கேட்ட நண்பனிடம்!!

இது தவறான சொல், பெண்ணை

இழிவு படுத்தும் சொல் என்று கூட

சொல்லாமல் ம் ம் ம் என்று தலையாட்டிய

எனக்கு

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ??

அதிக பட்சம்

அழுகை தான் வருது

நான் எங்காவது வரு இடத்தில்

கோபப் பட்டிருந்தால்???

 

தயவு செய்து கோவப் படுங்கள்…

 

இப்ப மட்டும் எப்படி கோவம் வரும்!!! – Written during the Nirbaya case and subsequent protests

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s